தூரல்

பெய்யெனப் பெய்யும் தமிழ்

ஈழக்கதவுகள் - சூரியதீபன்

ஈழக் கதவுகள்
- பா. செயப்பிரகாசம் (சூரியதீபன்)
தோழமை வெளியீடு, ரூ.100, முதல் பதிப்பு - சனவரி 2007, 160 பக்கம்

ஈழக் கதவுகள்

ஈழக் கதவுகள் - முன்னட்டை

ஈழக் கதவுகள்

ஈழக் கதவுகள் - பின்னட்டை

2002-ல் ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ மாநாட்டுக்கு யாழ் போயிட்டு வந்த எழுத்தாளர் சூரியதீபன், தன் பயண நிகழ்வுகளை, கவிதைகளும் மேற்கோளும் கதைகளும் நிகழ்ச்சிகளும் கலந்த கட்டுரைகளாக் கொடுத்திருக்காரு. மாநாடு நடக்கறப்ப அங்க சுத்தி இருக்கற தமிழர் இடங்களை பாத்து, வெவ்வேறு நினைவிடங்களைப் பத்தியும் மக்களின் நினைவுகளைப் பத்தியும் உணர்வுசொட்ட எழுதியிருக்காரு.

குறிப்பா, அங்க இலங்கைப்படையின்கீழ் இருக்கற பகுதிகள்-ல உள்ள கட்டுப்பாடுகளைப் பத்தியும், ஈழப்போரின் விளைவால அங்க உள்ளவைகளை - இல்லாமல் போனவைகளைப் பத்தியும், நூல் கடைசியில, தொண்ணூறுகளோடப் பிற்பகுதியில கூட்டங்கூட்டமாக் காணாமப் போனத் தமிழர்களப் பத்தியும் அவரு சொல்றதப் படிக்கும்போது நம்மையும் அறியாம கண்ணுல ஆறு ஓடத் தொடங்கிடுது. தேவையான இடங்கள்-ல கூட இருக்கறப் புகைப்படங்கள் மனசை அழுத்துது.

படிக்கும் நம்மையே வேதனைகொள்ளச் செய்யற இந்த நிகழ்வுகளும் இடங்களும் நேர்ல பாத்த எழுத்தாளரை என்ன பாடு படுத்தியிருக்கும்? அதைவிட, அந்த நிகழ்வுகள்-லயும் இடங்கள்-லயும் வாழ்ந்தும் வாழ்ந்துக் கொண்டும் இருக்கற தமிழர்கள் நிலை என்ன?! 2002-ல போர்நிறுத்தம் இருந்தப்பவே இவ்வளவு கெடுபிடிங்கறத நினைவுல வச்சிப் பாத்தா, இப்போ போர்க்காலத்துல என்னலாம் நடக்கும்னு கற்பனைக்கூட செஞ்சுப் பாக்க முடியல..

முன்னோட்டம்:

என்ன? பயணக்கட்டுரைகள். (தொடர்ச்சியுடன்)
எங்க வாங்கினேன்? ஊருல நூல்கண்காட்சி, வலையத்தில் வாங்க..
யாரு படிக்கலாம்? ஈழத்தமிழர்/ஈழத்தின் நிலை பத்தி அறிய விரும்பறவங்க.

நூலோட்டம்:

இந்த வேதனை நாங்கள் அறியாதது. தமிழ்ச்சமூகம் அறியாதது.

.. .. ..ஈழத்தமிழர்களின் வாழ்வு ஒரு கண்ணீர்க் கல்லறையாகி விட்டது. உலக வரைபடத்தில் அது பெரிய கண்ணீர்த்துளி.

எல்லாக் கட்டிடங்களும், மக்கள் விட்டுச் சென்ற எல்லா வீடுகளும் ராணுவ முகாமாகியிருந்தன. சிக்காமல் மீதியிருந்த வீடுகள் மூச்சடைத்து திணறின.

“இறந்து போனவர்களையே நிம்மதியாகத் தூங்க விடவில்லை. இவர்கள் உயிருள்ளவர்களை எப்படி வாழவிடுவார்கள்?” - பிரபாகரன் சொன்னார்.

பின்னோட்டம்:

வாங்க வைத்தது : ஈழத்தமிழர் மீதுள்ள ஆர்வமும் அன்பும்
தாங்க வைத்தது : மேற்கோள்களுடன் கூடிய எளிய இயல்புநடை
தூங்க வைத்தது : தூங்கவில்லை
ஏங்க வைத்தது : ஈழத்தமிழர் வாழ்வில் விடியல் பிறக்க

வலையத்தில் வாங்க..

குறிச்சொற்கள்: ,
November 18, 2008 - 12:18 AM சாரல்கள் (4)