தோகை
மயில்தோகை அழைத்தால்,
மழைமேகம் நெருங்கும்..
தமிழ்த்தோகை எழுத்தால்,
மொழித்தூரல் பொழியும்..
அழைக்காமல் வருவேன்.. அலுக்காமல் தருவேன்;
அமிழ்தான அலையே.. தமிழ்க்கேது விலையே..!
- (கவிஞர் வாலி மன்னிக்க
)
“கல்லாதது தமிழ்” என தமிழில் பட்டம் படிக்கவியலா தமிழ் ஆர்வலர் கூட்டத்தில் எனக்கும் ஓர் இடம்! ஆர்வம் மட்டும் இருந்தால் ஆர்வலரல்ல - ஆர்வக்கோளாறு! கோளாறு நீங்கச் செயலில் இறங்கி இதோ எழுதுகிறேன் கோளறுப் பதிகம் - தூரல்
தூரல் - மழையின் மண்ணைச் சாடும் சினம்போலன்றி அன்புடன் அறவணைக்கும் அழகிய இயற்கை இரவல்.. சின்னச்சின்ன துளிகள் தோல்மீது படும் உணர்ச்சியில் எழாத எண்ணங்களில்லை; சிந்தாத சிந்தனைகளில்லை..
என் எண்ணங்களில் படைந்துப் பெய்யும் இத்தூரல் உங்கள் சிந்தனைகளையும் சீண்டவேண்டுமென்பதென் ஆவல். சீண்டல்களையும் சீர்களையும் சிறுமைகளையும் சாரலாய்ச் சிந்துவதுச் சிறப்பு. (சாரல் - பின்னூட்டம்)



